சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு : கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை

திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவன், மனைவிக்கு தலா 4 தூக்கு தண்டனை விதித்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு : கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை
Published on

திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவன், மனைவிக்கு தலா 4 தூக்கு தண்டனை விதித்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டு திண்டிவனத்தில் ராஜி, அவரது மனைவி கலைச்செல்வி, மகன் கவுதம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணையில், சொத்துக்காக, பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிட்டு, ஏசி வெடித்து உயிரிழந்ததாக மூத்த மகன் நாடகமாடியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மகன் கோவர்த்தனன் மற்றும்

அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில், 2 பேருக்கும் தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com