சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று உயிரிழந்த 19 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அதன்படி, 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 31 வயது இளைஞருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர் திடீர் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் 30 வயது இளைஞர் ஒருவர் 4ஆம் தேதி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 5ஆம் தேதி திடீரென இறந்துவிட்டதாக சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று தினங்களில் இறந்ததாகவும் 43 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், 5ஆம் தேதி உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . சென்னையை சேர்ந்த 67 வயது முதியவர் 4ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, 5ஆம் தேதி இறந்ததாகவும், அவருக்கு பிறநோய் பாதிப்பு இருந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கு, பெரும்பாலும், சர்க்கரை மற்றும் பிற நோய் பாதிப்பு இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.