Rabies | Dog | நாய்க்கடி தடுப்பூசி செலுத்திய சிறுமி மரணம் உறவினர்கள் ரகளை.. பரபரப்பு காட்சி
Rabies | Dog | நாய்க்கடி தடுப்பூசி செலுத்திய சிறுமி மரணம் உறவினர்கள் ரகளை.. பரபரப்பு காட்சி #Rabies #Dog #DogBite #ChildDead தெலங்கானாவில் ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்திய சிறுமி சில மணிநேரங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தில் நாய்க்கடிக்கு தடுப்பு ஊசி செலுத்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடிக்கு ஆளான சிறுமி உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஊசி செலுத்திய சில மணிநேரங்களிலேயே சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
