விபத்தில் மரணம் - குடும்பத்தின் முடிவால் அரசு சார்பில் உடலுக்கு மரியாதை..

x

அரியலூர் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. காவனூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் கடந்த 4ம் தேதி தனது டூ வீலரில் சென்ற பொழுது, அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்தார். அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்