Death | CCTV | விளையாடும்போதே மயங்கி விழுந்து கல்லூரி மாணவி மரணம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்

x

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த 17 வயதுடைய அரசு கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், துறை சார்பில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திவ்யதர்ஷினி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனி​ன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்