தம்பியின் உடல் மீது விழுந்து கதறியழுத நிலையிலேயே பிரிந்த அக்கா உயிர்
சிவகங்கை மாவட்டத்தில் தம்பி இறந்த அதிர்ச்சியில் அக்காவும் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை பகுதியை சேர்ந்த மருதன், மூச்சு திணறல் ஏற்பட்டு இரவு உயிரிழந்த நிலையில், தம்பி இறந்த செய்தியை கேட்டு அவரது வீட்டிற்கு வந்த அக்கா புஷ்பம், தம்பியின் உடலின் மீது விழுந்து கதறி அழுத போது மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே இறந்ததாக கூறப்படுகிறது.
Next Story
