பகலில் அடமானம்... இரவில் தன் ஜீப்பையே திருடிய ஓனர்... பரபரப்பு காட்சி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காரை அடமானம் வைத்து 5 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு சென்ற காரின் உரிமையாளர், இரவில் வந்து காரை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த அருண் என்பவர், பைனான்ஸ் நிறுவனத்தில் தனது மகேந்திரா ஜீப்பை அடமானம் வைத்த நிலையில், அடமானம் வைத்த ஜீப்பை நள்ளிரவில் வந்து திருடி சென்றுள்ளார். இது குறித்து சிசிடிவி ஆதாரத்துடன் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்