Ramanathapuram | இன்று மகளுக்கு திருமணம்.. நேற்று மின்சாரம் தாக்கி பலியான தந்தை
இன்று மகளுக்கு திருமணம்.. நேற்று மின்சாரம் தாக்கி பலியான தந்தை
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே, மகள் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த மீனவர் கருப்பையா, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று வீட்டின் வேலியை சீரமைக்கும் போது அருகிலிருந்த மீட்டர் பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி கருப்பையா தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மகளின் திருமணம் நிறுத்தப்பட்டதுடன், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
#ramanathapuram #father #death #tragedy #thanthitv
