செல்போன் அதிகம் பார்த்ததால் தாய் கண்டிப்பு - மகள் தற்கொலை
திருப்பத்தூர் அருகே அதிகமாக செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்.
சின்னவட்டானூரை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் காளீஸ்வரி. தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த இவருக்கு சக மாணவனுடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையறிந்த பெற்றோர் மகளை கல்லூரியை விட்டு நிறுத்தியுள்ளனர். இதனால் காளிஸ்வரி அதிகமாக செல்போன் பயன்படுத்துவதில் மூழ்கிய நிலையில் அவரது தாய் கண்டித்துள்ளார். இருப்பினும், அவர் சக மாணவர்களிடம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த அவரது தாய் செல்போனை பிடுங்கி வீசி எறிந்ததால் காளிஸ்வரி பூச்சிமருந்து குடித்த நிலையில் மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story
