தூங்கும் போதே வந்த ஆபத்து.. துடிதுடித்து பலியான மகன் - சொல்லி சொல்லி கதறும் தாய்
கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கூடலூரை அடுத்துள்ள ஆரோட்டு பாறை பகுதியில் வினோத் என்பவர் தனக்கு சொந்தமான பழைய வீடு ஒன்றில் உறங்கி கொண்டிருந்த நிலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வினோத்தின் உடலைப் பார்த்து அவரது தாயார் கதறி அழுதது கண்கலங்க வைத்தது.
Next Story
