Tiruchendur | Temple | அனுமதி இல்லாத பகுதியில் நடனம் | திருச்செந்தூர் கோவிலில் அதிர்ச்சி
Tiruchendur | Temple | அனுமதி இல்லாத பகுதியில் செண்டை மேளம் முழங்க நடனம் | திருச்செந்தூர் கோவிலில் அதிர்ச்சி
#tiruchendurtemple #murugantemple #tiruchendur #thanthitv
திருச்செந்தூர் கோவிலில் அனுமதி இல்லாத பகுதியில் நடனம் - விளக்கம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் காரணமாக, சண்முக விலாச மண்டபத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கிரில் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்திரை சுக்ல சஷ்டியை முன்னிட்டு பால்குடம் எடுத்த 50-க்கும் மேற்பட்ட திரிசுதந்திரர்கள், தடை செய்யப்பட்ட அந்த மண்டபத்திற்குள் செண்டை மேளம் முழங்க நடனமாடினர். பக்தர்களுக்கு அனுமதி இல்லாத இடத்தில், திருச்செந்தூர் கோவிலின் வழிபாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் திரிசுதந்திரர்கள் நடனம் ஆடியது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.... இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோவில் இணை ஆணையர் ராமு, இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். திரிசுதந்திரர்கள் தரப்பிலோ, இது காலம் காலமாகத் தங்கள் சமூகத்தினர் நடத்தி வரும் வழக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
