சென்னையில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தியாகராஜ நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அம்பிகா கலந்து கொண்டார். இதில் முதியவர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதியவர்களுக்கான நடனம், ஜோடிகள் கலந்து கொண்ட கேட் வாக் - ஷோ போன்றவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த தன் மாணவியை 45 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த ஆசிரியர் ஆரத்தழுவியது காண்போரை நெகிழ வைத்தது.