நாட்டிய நிகழ்ச்சி - அசத்திய மாணவிகள்
அமைச்சருக்கு நன்றி கூறும் விழாவில், மாணவிகள் பரத நாட்டியம் ஆடி அசத்திய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. சென்னை குன்றத்தூரை அடுத்த போரூரில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்கப்பட்டு அதன் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், மாணவிகள் பரத நாட்டியம் ஆடி அசத்தினர். மேலும், மாணவிகளின் நடன ஆசிரியை, கீழே அமர்ந்தபடி, அவர்களுக்கு நாட்டிய சமிஞை காண்பித்து வழிநடத்திய காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Next Story
