மேட்டுப்பாளையம் அருகே அணை திறப்பு - பவானியில் கரைபுரண்டோடும் வெள்ளம்
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் நான்கு மதகுகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெருக்கெடுத்து ஓடும் பவானியாற்றை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பவன்குமார், “வெள்ளப்பெருக்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன,” என்றார்.
Next Story
