தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் "தினத்தந்தி"

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.
தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் "தினத்தந்தி"
Published on

டி.ஆர்.ஏ. என்ற டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி நிறுவனம், வணிக முத்திரையுடன் கூடிய பல்வேறு வகையான நுகர் பொருட்களின் மீது வாடிக்கையாளர்கள் வைத்து இருக்கும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி, டி.ஆர்.ஏ. நிறுவனம் தமது 9-வது கள ஆய்வை 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த மார்ச் மாதம் வரை மேற்கொண்டது. இந்தியா முழுவதும் 16 நகரங்களில் 400-க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரித்துள்ளனர்.

21 முதல் 50 வயது வரையிலான மாத சம்பளம் பெறுவோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்காக கேள்விகள் கேட்கப்பட்டவர்களில் ஆண்கள் 80 சதவீதம் பேர்; பெண்கள் 20 சதவீதம் பேர். இதில், பத்திரிகைகள் தொடர்பான ஆய்வில், இந்திய அளவில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகள் வரிசையில் 12 பத்திரிகைகள் இடம் பெற்று உள்ளன. அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய இந்த ஆய்வில் தினத்தந்திக்கு 8-வது இடம் கிடைத்து இருக்கிறது. அதே சமயம், தமிழில் தினத்தந்திக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. 'தினத்தந்தி' தவிர வேறு எந்த தமிழ் பத்திரிகையும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com