

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றில் முறைகேடாக மணல் அள்ளியபோது, மணல் சரிந்து விழுந்ததில் தந்தை,மகன் உயிரிழந்தனர். கோட்டைபட்டி வைப்பாற்றில், விஜயகரிசல்குளத்தை சேர்ந்த பிள்ளையார் மற்றும் அவரது மகன் மாரியப்பன் ஆகியோர் முறைகேடாக மாட்டுவண்டியில் மணல் அள்ளியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மணல் சரிந்து விழுந்ததில், இருவரும் மணலில் புதைந்தனர். உடனிருந்தவர்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.