சென்னை கேஸ் சிலிண்டர் விபத்து 3 பேர் சாவுக்கு வால்வு தான் காரணமா? - மக்களே உஷார்
சென்னையில் கேஸ் சிலிண்டர் மாற்றும்போது தீ விபத்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வீரக்குமார் என்பவரது வீட்டில், கேஸ் சிலிண்டரை மாற்றியபோது, கேஸ் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பூஜை அறையில் விளக்கு எரிந்ததால், திடீரென தீப்பற்றிய நிலையில், வீரக்குமார் அவரது மனைவி, மருமகன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 3 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
