நகை பட்டறையில் சிலிண்டர் விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு
நகை பட்டறையில் சிலிண்டர் விபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு
சென்னை சவுகார்பேட்டையில் நகை பட்டறை ஒன்றில் நகைகளை உருக்கும் போது சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 25-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில், படுகாயமடைந்த உரிமையாளர் சுமன் பால், சிமந் தோமல் ஆகியோர் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், சூரஜ் தோலே என்ற ஊழியரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
