Palaverkadu | அர்னாப் புயலின் தாண்டவம்... பழவேற்காட்டில் காணாமல் போன சாலை
அர்னாப் புயலின் தாண்டவம்... பழவேற்காட்டில் காணாமல் போன சாலை
#cyclone | #Arnab | #Palaverkadu
அர்னாப் புயலின் தாண்டவம்... பழவேற்காட்டில் காணாமல் போன சாலை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அர்னாப் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் ஏற்பட்டு, பழைய முகத்துவாரப் பகுதியில் சாலை முழுவதும் மணல் திட்டுக்களாக மாறியுள்ளது. கருங்காலி - சிந்தாமணிக்குப்பம் இடையே சாலையில் மணல் குவிந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். அதானி துறைமுகம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு தினசரி வேலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் குவிந்துள்ள மணலை இயந்திரங்கள் மூலம் உடனடியாக அகற்றவும், நிரந்தரத் தீர்வாக பழைய முகத்துவாரப் பகுதியில் மேம்பாலம் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
