7ஆம் தேதி தொடங்கிய சைக்கிள் பேரணி.. குமரியில் மேளம் கொட்டி வரவேற்ற CISF அதிகாரிகள்
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் 6,559 கிலோமீட்டர் தூர சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது. "வளமான இந்தியா - பாதுகாப்பான இந்தியா"- என்ற முழக்கத்துடன் கடலோர பாதுகாப்பு, கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், ஆயுத கடத்தல் போன்றவற்றை தடுப்பது மற்றும் பெண் கல்வி குறித்து கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 7ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பக்காளி கடல் பகுதியில் இந்த பேரணி தொடங்கியது. இதையடுத்து கன்னியாகுமரி வந்த இந்த குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story
