எம்.எல்.ஏ-ஆன சைக்கிள் கடை ஓனர்..தலைநகரில் தனித்து நிற்கும் தி.நகர் சத்யா..கோடிக்கணக்கில்..முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சி

அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா, ஆரம்ப காலகட்டத்தில் சைக்கிள் கடை, பால் வியாபாரம், சி டி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன்பின்னர் பொதுப்பணித்துறையில் கான்ட்ராக்டர் எடுக்கும் வேலையையும், விழுப்புரம், சென்னை ஆகிய இடங்களில் டாஸ்மாக் பாரும் நடத்தி வந்துள்ளார்.

தி.நகர் சத்யா, தனது மனைவி மற்றும் மகள் பெயர்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திராவில் உள்ள மண்டல் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் சொத்துக்களை வாங்கியது தெரியவந்துள்ளது.

மனைவி பெயரில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபார்ச்சூனர் கார், மகள் பெயரில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார்

 சத்யநாராயணன் பெயரில் 92 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் கார் வாங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக வருமானத்துக்கு அதிகமாக இரண்டரை கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து சேர்த்ததாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com