CyberCrime | Chennai | வங்கி கணக்குகளை சீன கும்பலுக்கு விற்ற இளைஞர் | சென்னையில் பேரதிர்ச்சி சம்பவம்

CyberCrime | Chennai | வங்கி கணக்குகளை சீன கும்பலுக்கு விற்ற இளைஞர் | சென்னையில் பேரதிர்ச்சி சம்பவம்

Cyber Crime | Chennai | வங்கி கணக்குகளை சீன கும்பலுக்கு விற்ற இளைஞர் | சென்னையில் பேரதிர்ச்சி சம்பவம்

ரூ.1.73 கோடி சைபர் மோசடி - வங்கி கணக்குகளை விற்றவர் கைது சென்னையில் 1.73 கோடி ரூபாய் சைபர் மோசடி வழக்கில், பொதுமக்களின் வங்கி கணக்குகளை, மோசடி கும்பலுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் இளைஞரை கைது செய்தனர் போரூரைச் சேர்ந்த யோகானந்த் என்பவரிடம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், மூன்று மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கூறி, மர்ம நபர்கள் 1.73 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், போலி நிறுவன வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதை கண்டறிந்து, அன்பழகன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பொதுமக்களின் வங்கி கணக்குகளை கமிஷன் தருவதாகக் கூறி, வடமாநில சைபர் ஏஜென்டுகள் மூலம் சீன சைபர் மோசடி கும்பலுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. மோசடி கும்பலுக்கு விற்ற மாதவன் என்பவரை மறைமலை நகரில் கைது செய்தனர். இதனிடையே, அவர் விற்ற வங்கி கணக்குகள் தொடர்பாக, நாடு முழுவதும் 67 சைபர் புகார்கள் இருந்ததும் தெரியவந்தது

X

Thanthi TV
www.thanthitv.com