இட்லிக்கு 8 ரூபாய் ஜாஸ்தி கொடுத்த கஸ்டமருக்கு கிடைத்த 30 ஆயிரம் ரூபாய்
திருச்சி ரயில் நிலையத்தில் இட்லி பார்சலுக்கு கூடுதல் கட்டணமாக 8 ரூபாய் வசூலித்த ரயில்வே கேட்டரிங் நிறுவனத்திற்கு விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லும் வைகை அதிவேக விரைவு ரயிலில் பயணித்த நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவரான ஆரோக்கியசாமி,
விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், ஆரோக்கியசாமிக்கு இருபதாயிரம் ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டும், வழக்குச் செலவுக்காக 10 ஆயிரமும் ,மேலும் கூடுதலாக பெற்ற 8 ரூபாயையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
Next Story
