கஸ்டடி மரணம் - உடைந்த பைப்புகள், ரத்தக்கறை - உலுக்கும் காட்சி

x

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது மரணமடைந்த நிலையில், போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, மடப்புரம் கோவில் அறநிலை துறை உதவி ஆணையர் அலுவலகம் பின்பு உள்ள மாட்டு கொட்டகையில் வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பைப்புகளால் அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தில் உடைந்த பைப்புகள், ரத்தக்கரை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்