கரண்ட் கட்.. பிரேமலதா ஆவேச பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்... அதன் ஒரு பகுதியாக தாராட்சி மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ளும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது... அப்போது பனங்காட்டு நரி சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது என்று தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், மின்சாரத்தை துண்டித்தாலும் தன் வாகனத்தில் இருக்கும் ஒளியை வைத்து மக்களை சந்திப்பதாக தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அனைவரும் சின்ன கேப்டனை பார்க்க வேண்டும் என கூறவே, பிரேமலதா அழைத்ததும் காரை விட்டு வெளியில் வந்து மக்களை சந்தித்தார்...
Next Story
