

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 28 நாட்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சமூகத்தில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் தென்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை மூடினால், தமிழ் சமுதாயத்தின் மனித வளம் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்பட்டு, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்றும் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.