தினத்தந்தி நாளிதழ் சார்பில் நடைபெற்ற "கலாச்சார நடை" திருவிழா
தினத்தந்தி நாளிதழ் சார்பில் நடைபெற்ற "கலாச்சார நடை" திருவிழா
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினத்தந்தி நாளிதழ் சார்பாக கலாச்சார நடை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது ...
கலாச்சார நடை திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகர் மற்றும் ஐஜி சரவண சுந்தர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்...
முன்னதாக தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற கலைஞர்களின் ஒயிலாட்டமும், பெண்களின் லயமான வள்ளி கும்மி ஆட்டமும், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன..
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் பாரம்பரிய உடைகளை அணிந்து உற்சாகமாக நடைப்பயணத்தில் பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது.
விழாவின் முடிவில் தமிழர்களின் கலாசாரத்தை அழகாக எடுத்துரைத்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன..
Next Story
