தாய்க்கே தெரியாமல் பெற்ற மகளிடம் தந்தை செய்த அசிங்கமான செயல் - பெரும் அதிர்ச்சி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, பெற்ற மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அருகே கால்நாட்டம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி மற்றும் 11 வயது மகளுடன் வசித்து வந்தார். சுரேஷ் அடிக்கடி மதுபானம் அருந்திவிட்டு குடும்பத்தினரிடம் பிரச்சனை செய்ததால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகள் கூறியதால் அதிர்ச்சியடைந்த தாயார், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com