

கடலூரில் 2 வங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு சொந்தமான 6 லாக்கர்களை, அவரது மனைவி மங்கையர்க்கரசி முன்னிலையில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 2 லாக்கரை மட்டும் திறந்து சோதனை செய்தபோது, 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது மனைவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், மேலும் 4 லாக்கரை சோதனை செய்ய முடியவில்லை. அங்கு வரும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்படும் என, போலீஸார் தெரிவித்தனர்.