Cuddalore || சிறுவர்களை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த இளைஞர் - வெளியான ஷாக் வீடியோ
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுவர்களை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அடுத்துள்ள அம்மன் கோவில் கிராமத்தில், சிறுவர்கள் 3 பேரை, இளைஞர் ஒருவர் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் விசாரணை மேற்கொண்டார். இதில், சிறுவர்களுக்கு மது கொடுத்தது, அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என தெரியவந்தது. அவர் மீது காவல்துறையில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
Next Story
