கடலூர் ரயில் விபத்து - ரயில்வே வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
கடலூர் ரயில் விபத்து நடைப்பெற்ற இடத்தில் சுரங்கபாதை அமைப்பது தொடர்பாக எந்த தகவலும் தங்களின் கவனத்திற்கு வரவில்லை என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் விஷ்வேஸ் வேன் ஒட்டுநர் சங்கர் ஆகியோரை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே, சின்னகாட்டு சாகை கிராமத்தில் உள்ள திராவிட மணி, வீட்டிற்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சென்று உயிரிழந்த மாணவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, முதல்வர் நிவாரண நிதி தலா 5 லட்சம் ரூபாய் என பத்து லட்சம் ரூபாயை உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
Next Story
