ஷூ போடுறதுக்கு முன்னாடி இத கண்டிப்பா பாருங்க... பதை பதைக்க வைக்கும் வீடியோ

கடலூர் சிப்காட் அருகே, பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் காலணியில், 3 அடி நீள நல்ல பாம்பு பதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன காரைக்காடு கிராமத்தை சேர்ந்த விஜயபாலன் என்பவர், தனது வீட்டிற்கு வந்த பாம்பினை துரத்தியபோது, அந்தப் பாம்பு காலணிகள் வைக்கும் இடத்திற்குச் சென்று மாயமானது. இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த வன ஆர்வலர் செல்லா, பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் காலணிக்குள் பதுங்கிய மூன்று அடி நீள நல்ல பாம்பை பிடித்து, பாட்டிலில் அடைத்து காப்புக்காட்டில் விட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com