

கடலூர் மாவட்டம் புலிகரம்பலூர் கிராமத்தை சேர்ந்த கற்பகம் என்பவருக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கற்பகத்திற்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிசிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கற்பகம் உயிரிழந்தார். திருமணம் ஆகி 9 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பாக்கியம் பெற்ற பெண், பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது