Cuddalore Latest News|பாலியல் டார்ச்சர் செய்து இளம்பெண்ணை வதைத்தவன் ரத்த வெள்ளத்தில் மிதந்த பயங்கரம்

x

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கழுத்து அறுத்து கொலை

கடலூர் பாதிரிக்குப்பத்தில், பிரசாத் என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிற்குள் ஓடிவந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரசாதை, அந்த பெண்ணின் அக்காவும் மாமாவும் சேர்ந்து வெட்டிக் கொன்றதாக தெரியவருகிறது. குற்றம்சாட்டப்பட்ட பெண் போலீசில் சரண் அடைந்தார். கொல்லப்பட்ட 37 வயது பிரசாத், ஐ.டி.ஐ படித்த நிலையில் அவருக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறப்படுகிறது. இவர் 2 ஆண்டுகளாக தனது தாயுடன் ராமதிலகம் என்பவருடன் அந்த பகுதியில் வசித்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்