Cuddalore | Gun Issue | கையில் துப்பாக்கியுடன் தகராறு - தீயாய் பரவிய அதிமுக பிரமுகரின் வீடியோ..

x

Cuddalore Gun Issue | கையில் துப்பாக்கியுடன் தகராறு - தீயாய் பரவிய அதிமுக பிரமுகரின் வீடியோ.. கடலூரில் அதிர்ச்சி

கடலூர் அருகே கை துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. விலங்கல்பட்டு கிராமத்தை அடுத்த குழந்தைகுப்பத்தில், கிராவல் குவாரி நடத்துவது தொடர்பாக அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் கோபால் ஆகியாருக்கும், அதே பகுதியை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கொஞ்சிகுப்பம் வினோத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கோபால் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அது அனுமதி பெற்ற துப்பாக்கி என்ற போதிலும், பொதுவெளியில் பயன்படுத்தியதற்காக கோபாலை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்