எல்லை மீறிய மாமனாரை எரித்துக் கொன்ற மருமகள் - நியாயம்தான் என விடுதலை?
கடலூரில் மனைவி, மருமகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட மாமனார் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் விடுவித்தனர்.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் ராஜா வெளியூரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ராஜாவின் மனைவிக்கு மாமனார் சரவணன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் தனது மாமியாருடன் சேர்ந்து சரவணன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக சரவணனின் மனைவி, மருமகள் கைது செய்யப்பட்ட நிலையில், சரவணன் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டதால் தற்காப்புக்காக கொலை செய்ததாகக் கூறி இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
Next Story