கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஓடும் பேருந்தில், டீசல் டேங்க் கழன்று விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதாச்சலம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு, தனியார் கல்லூரி பேருந்து ஒன்று பெரம்பலூர் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் பெண்ணாடம் அருகே சென்றபோது, பேருந்தின் டீசல் டேங்க் தீடீரென கழன்று விழுந்தது. ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக, விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.