

கடலூரில் இடப்பிரச்சினையால் கையில் அரிவாளுடன் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பணிக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏனோக். இவருக்கும், ஆரோக்கியசாமி என்பவருக்கும் இடப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனிடையே முந்திரி தொழிற்சாலையில் ஏனோக்கின் மகன் தாமஸ் விஜய், கையில் அரிவாளுடன் வீரமணி என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது ஆரோக்கியசாமியும் கையில் ஆயுதங்களுடன் அங்கிருந்த வாகனங்களையும் தாக்கி உள்ளார். இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்ட நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. இதன்பேரில் போலீசார் இரு தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.