பெட்ரோலுடன் சுத்தியல் எடுத்துச் சென்றதால் விபரீதம் : உராய்வில் தீப்பற்றி எரிந்த இரு சக்கர வாகனம்...

கடலூர் தேவனாம்பட்டினத்தில், இரு சக்கர வாகனத்தில் பெட்ரோலுடன் சுத்தியல் எடுத்து சென்றதால், உராய்வில் தீப்பற்றி இரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்தது.
பெட்ரோலுடன் சுத்தியல் எடுத்துச் சென்றதால் விபரீதம் : உராய்வில் தீப்பற்றி எரிந்த இரு சக்கர வாகனம்...
Published on

கடலூர் தேவனாம்பட்டினத்தில், இரு சக்கர வாகனத்தில் பெட்ரோலுடன் சுத்தியல் எடுத்து சென்றதால், உராய்வில் தீப்பற்றி இரு சக்கர வாகனம் முழுவதுமாக எரிந்தது. சக்தி என்பவர் இரு சக்கர வாகனத்தின் டேங்க் கவரில், பெட்ரோலும், சுத்தியலும் வைத்துக்கொண்டு இன்று அதிகாலை வேலைக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பாட்டிலில் இருந்த பெட்ரோல் திடீரென தீப்பற்றி கொண்டது. இதையடுத்து உடனடியாக வாகனத்தை நடுரோட்டில் விட்டு விட்டு சக்தி தப்பித்துவிட்ட நிலையில், வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த கடலூர் தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்ததனர்.

X

Thanthi TV
www.thanthitv.com