Cuddalore Bike Accident | நடுரோட்டில் மளமளவென பற்றி எரிந்த பைக் -3 பேர் படுகாயம்..கடலூரில் அதிர்ச்சி

Cuddalore Bike Accident | நடுரோட்டில் மளமளவென பற்றி எரிந்த பைக் -3 பேர் படுகாயம்..கடலூரில் அதிர்ச்சி

Cuddalore Bike Accident | நடுரோட்டில் மளமளவென பற்றி எரிந்த பைக் - 3 பேர் படுகாயம்.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனை சாலையில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புல்லட்டில் இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக வந்தபோது, பெட்ரோல் நிலையத்தில் இருந்து சாலையை கடக்க முயன்ற அபிமன்யு என்ற முதியவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்தது. இதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில், அவரது இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. புல்லட்டில் வந்த இளைஞர்களும் காயமடைந்த நிலையில் மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com