கடலூரில் சாராயம் காய்ச்ச மூலப்பொருட்களை விற்ற நபரை போலீசார் கைது செய்து கடைக்கு சீல் வைத்தனர். கடலூர் சின்னவாணியர் தெருவில் சாராயம் காய்ச்ச முக்கிய மூலப்பொருளாக உள்ள ஈஸ்ட் எனப்படும் பவுடரை விற்பனை செய்து வந்தவரை போலீஸ் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து 1000 கிலோ அளவிற்கு ஈஸ்ட்பவுடர் பறிமுதல் செய்த அவர்கள் கிருஷ்ணராஜ் என்ற கடை உரிமையாளரை கைது செய்ததுடன் கடைக்கும் சீல் வைத்தனர்.