Cuddalore | ஆசையாய் குவாட்டர் வாங்கி சென்றவருக்கு வழியில் காத்திருந்த அதிர்ச்சி
மிலாடி நபி - கடலூரில் இருந்து வாங்கி சென்ற மதுபானங்கள் அழிப்பு
மதுபாட்டில்களுடன் கடலூரில் இருந்து படையெடுத்த மதுப்பிரியர்களிடம் இருந்து மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மிலாடி நபியை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், கடலூர் - புதுச்சேரி எல்லையில் ஆல்பேட்டை என்ற பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், பலரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம் கீழே ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும், அளவுக்கு அதிகமாக மதுபானம் கொண்டு வந்த நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
