கிரிப்டோ கரன்சி முதலீடு - ரூ.180 கோடி வரை மோசடி?

x

கிரிப்டோ கரன்சி முதலீடு - ரூ.180 கோடி வரை மோசடி?

சேலத்தில் கிரிப்டோ கரன்சி முதலீடு எனக்கூறி 180 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாரமங்கலத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அனுசுயாதேவி. இவரது குடும்ப நண்பரான ஸ்டாலின் என்பவர் அனுசுயாதேவி மூலம்

அதே பகுதியை சேர்ந்த 14-க்கும் மேற்பட்டோரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி 40 லட்சம் வரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் காவல் ஆணையரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளதாகவும், மொத்தமாக 180 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்