Tiruchendur Murugan Temple | திருச்செந்தூர் கோவில் உண்டியலில் கோடிக்கணக்கில் வந்த காணிக்கை

திருச்செந்தூர் கோவில் உண்டியலில் கோடிக்கணக்கில் வந்த காணிக்கை

Tiruchendur Murugan Temple | திருச்செந்தூர் கோவில் உண்டியலில் கோடிக்கணக்கில் வந்த காணிக்கை - எவ்வளவு தெரியுமா? திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், கடந்த மாதம் 4 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 205 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில், 100-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் உழவாரப்பணி குழுவினர் ஈடுபட்டனர். மேலும், ஆயிரத்து 22 கிராம் தங்கம், 22 ஆயிரத்து 292 கிராம் வெள்ளி மற்றும் ஆயிரத்து 447 வெளிநாட்டு கரன்சியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com