Chennai | Crime | ஜாமீனில் வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் | ஸ்கெட்ச் போட்டு இறங்கிய கும்பல்

ஜாமீனில் வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் | ஸ்கெட்ச் போட்டு இறங்கிய கும்பல்

Chennai | Crime | புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் | ஸ்கெட்ச் போட்டு அரிவாள்களுடன் இறங்கிய கும்பல்

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை வெட்ட முயன்ற மர்ம கும்பல் சென்னை புழல் காவல் நிலையம் அருகே, காரில் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகளை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜமங்கலத்தைச் சேர்ந்த 2 பேர், காரில் சென்னை நோக்கி சென்றனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், காரை துரத்திச் சென்று வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் காரில் இருந்த இருவரும் கீழே இறங்கி, அருகிலிருந்த புழல் காவல் நிலையத்திற்குள் தஞ்சமடைந்தனர். ஆத்திரமடைந்த கும்பல் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியது. இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com