"பிரைவேட்டில் பல லட்சம் செலவு.. பார்க்கவே விடல".. கதறிய உறவினர்கள் - பகீர் பின்னணி அம்பலம்

x

சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை, அறுவை சிகிச்சை முடிந்து 10 நாட்களாகியும் காண்பிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி ஜெயபுஷ்பாவுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரித்தபோது, நரம்பியல் கோளாறால் அவர் சுயநினைவின்றி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பல லட்சம் செலவு செய்தும், அரசு மருத்துவமனைக்கு அனுப்புவது என்ன நியாயம் என கேட்டு கதறி அழுதனர்.


Next Story

மேலும் செய்திகள்