Crime | பாட்டி தலையை வெட்டி தனியாக எடுத்த கொடூர பேரன் - இப்படி சொன்னதற்கா இந்த படு பயங்கரம்
பாட்டியை தலையை வெட்டி தனியாக எடுத்த கொடூர பேரன் - இப்படி சொன்னதற்கா இந்த படு பயங்கரம்
திருப்பூர் மாவட்டத்துல, அறிவுரை சொன்ன மூதாட்டிய அவரது பேரனே தலை துண்டித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு....
தாராபுரம் அருகே குண்டடத்தை அடுத்துள்ள பெரிய குமாரபாளையம் செட்டிகாரதோட்டத்தை சேர்ந்த
80 வயதாகும் மயிலாத்தாள், தனது பேரன் விஜயகுமாருடன் வசித்து வந்தார். விஜயகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அவரது பாட்டி மயிலாத்தாள் கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் உள்ள கட்டிலில் மயிலாத்தாள் படுத்திருந்தபோது,
மது போதையில் வீட்டிற்கு வந்த விஜயகுமார், செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மயிலாத்தாள் பணம் இல்லை எனக்கூறியதால் ஆத்திரமடைந்த விஜயகுமார், அரிவாளை எடுத்து மயிலாத்தாளின் தலையை மட்டும் தனியாக அறுத்து துண்டித்தார். இதில் மூதாட்டி துடிதுடித்து இறந்த நிலையில், விஜயகுமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
