குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1.2% சரிவு - தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்

தென்இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1 புள்ளி 2 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தென்இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1 புள்ளி 2 சதவீதம் குறைந்துள்ளது என தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், நலத்திட்ட உதவிகளை வழங்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஓராண்டில் தென்இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 1 புள்ளி 2 சதவீதம் குறைந்துள்ளது எனவும் ஆனந்த் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com