Chengalpattu | தரையில் வழுக்கி விழுந்து முறிந்த பசுமாட்டின் கால் - வயதான தம்பதி வேதனை
செங்கல்பட்டில், கால்நடை மருத்துவமனையின் அலட்சியத்தால் பசு மாட்டுக்கு கால் முறிவு ஏற்பட்டதாக வயதான தம்பதி புகார் தெரிவித்துள்ளனர். பசுமாட்டின் காதில் ஏற்பட்ட சிறு காயத்திற்கு சிகிச்சை அளிக்க, பம்மல் கால்நடை மருத்துமனைக்கு ராஜேந்திரன்-வளர்மதி தம்பதி மாட்டை கொண்டு சென்றுள்ளனர். அப்போது தரையில் சறுக்கி விழுந்ததில் மாட்டிற்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனை உதவியாளரால்தான் மாட்டிற்கு கால் முறிவு ஏற்பட்டதாக வேதனை தெரிவிக்கும் தம்பதி, அதிகாரிகள் தலையிட்டு உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
