பன்றிக்கு வைத்த வெடியை கடித்த மாடு படுகாயம்
கிருஷ்ணகிரியில் பன்றிக்கு வந்த வெடி பொருளை மாடு கடித்து வாய் வெடித்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி முத்துராமன், பத்துக்கு மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல மேச்சலுக்கு மாடை விட்டுவிட்டு வீடு திரும்பியபொழுது, திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. சம்பவ இடம் சென்று பார்த்தபொழுது, காட்டுப்பன்றி வேட்டையாட வைக்கப்பட்ட வெடி பொருளை மாடு கடித்ததால், வெடி பொருள் மாடு வாயில் வெடித்து, மாடு இறக்கும் தருவாயில் உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
